மருத்துவம் அறிவோம்
रोगों के बारे में पता - ईगरै शिवकुमार सुब्बुरमण - நோய்களை பற்றி அறிந்து கொள்வோம் - ஈகரை சிவகுமார் சுப்புராமன்அனீமியா
- Posted: 4:02 AM
- |
- Author: சிவகுமார் சுப்புராமன்
- |
- Filed under: அனீமியா
அனீமியா என நாம் ஆங்கிலத்தில் சொல்வது இரத்தக் குறைபாடு என்ற பொருள் தரும் சொல்லாகும். அதை மக்களின் வழக்குச் சொல்லில் இரத்த சோகை என்று குறிப்பிடுகிறோம். எனவே இரத்தக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது, அது வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? அது வந்துவிட்டால் அதற்கு என்ன சிகிச்சை அளிக்கிறோம் என்ற செய்திகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கிச் சொல்ல வேண்டியது இந்திய நாட்டின் மருத்துவர்களாகிய எங்கள் கடமையாகும்.
எனவே இந்திய மருத்துவர் சங்கக் கிளைகள் ஆங்காங்கே பொது மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.உயிர் திரவம் என நாம் கருதும் இரத்தம் என்பது உடலிலுள்ள மற்ற உறுப்பு மண்டலங்களைப் போல திரவ நிலையிலுள்ள உடலுறுப்பு என்று கூடச் சொல்லலாம். இதை ஒரு இணைப்புத்திசு என மருத்துவ அறிவியல் கருதுகின்றது. குருதிக்குறை என்பது உடலிலுள்ள இரத்தத்தின் அளவு குறைவதாலும் ஏற்படலாம். அந்த நிலை விபத்துக்களின் போது உண்டாகும் காயங்களிலிருந்து இரத்தம் உடலிருந்து அளவுக்கு அதிகமாக வெளியேறுவதால் ஏற்படும் நிலை.
நம் கண்களுக்கு இரத்தம் சிவப்பு நிற நீர்மமாக, திரவமாக தென்பட்டாலும் உண்மையில் அதில் நீர்ப்பொருளோடு உடல் திசுக்களுக்கு உணவளிக்கும் பாதுகாப்பளிக்கும் பல்வேறு அணுக்களும் மறைந்துள்ளன. அவற்றை உருப்பெருக்கி மூலம் பார்க்கும் போது இரத்தில் என்ன வெல்லாம் உள்ளன என அறிந்துகொள்ள முடியும்.
முதலில் இரத்ததின் அமைப்பை அறிந்து கொள்வோம். இரத்தத்தில் 55 விழுக்காடு நீர்ப்பொருளும் 45 விழுக்காடு உயிரணுக்களும் உள்ளன. பிளாஸ்மா என்பது நீர்ம நிலையில் உள்ள இரத்தப் பகுதியாகும். இதை குருதி நீர் என்று கூறலாம். இந்த குருதி நீரில் இரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளையணுக்கள் லுக்கோசைட்ஸ் மற்றும் தட்டணுக்கள் கலந்துள்ளன.
பிளாஸ்மாவில் இருந்து ஃபைப்ரினோஜன் என்னும் புரதம் நீக்கப்பட்ட நிலையில் அதை சீரம் என்று அழைக்கப்படுகிறது. சீரம் அல்லது பிளாஸ்மாவின் நிறம் வெண் மஞ்சள் நிறமாகும். இரத்தம் சிவப்பாயிருப்பதற்குக் காரணம் சிவப்பணுக்களாகும். அதிலும் குறிப்பாக சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபின் என்னும் நிறமிப் பொருளாகும்.
கிரேனுலோசைட்கள் என்பவை நிறக்குருணைகள் கொண்டவை. அவற்றின் அடிப்படையில் அவற்றை
1. இயோசினோஃபில் அதாவது இயோசின் நிறமேற்கும் செல்கள்.
2. பேசோஃபில்
3. நியூட்ரோஃபில் நிறமேற்காசெல்கள். இவற்றை பாலிமார் ஃபோ நீயூக்ளியர் லியூக்கோ சைட்கள் அல்லது பாலிமார் ஃப்கள் என்று அழைக்கின்றோம்.நிறக்குருணைகள் இல்லாதவை ஏகிரேனுலோசைட்டுகல் ஓரணுக்கள் என்றும் அழைக்கிறோம். மருத்துவர்கள் இரத்த சோதனைக்கு சீட்டு எழுதித்தரும் போது…
R.B.C, Hb%, T.C, D.C. என்று எழுதித் தருவதை பார்த்திருப்பீர்கள். RBC என்பது இரத்ததில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையாகும். T.C. என்பது மொத்த வெள்ளணுக்களின் எண்ணிக்கையாகும். நிண அணுக்கள் D.C என்பது Differential count அதாவது ஒவ்வொரு வகை வெள்ளணுக்களும் மொத்த வெள்ளணுக்களின் எத்தனை விழுக்காடு என்பதாகும். இரத்த சோதனை முடிவுகளில் DC எனக்குறிப்பிட்டு P,E,B,L,M எனக்குறிப்பிடுவார்கள். P என்பது பாலிமார்ப்கள் E% என்பது இயோசினோ ஃபில்களின் விழுக்காடு ஆகும்.
B% என்பது பேசோஃபில்கள்
L% என்பது லிம்ஃபோசைட்கள்
M% என்பது மானோசைட்களைக் குறிக்கும்
சோதனைச்சாலை முடிவுகளைக் குறிக்கும்போது ஒரு கியூபிக் மில்லி மீட்டர் இரத்தில் எத்தனை அணுக்கள் உள்ளன என்று குறிப்பிடுகிறார்கள். இரத்ததில் எல்லாவகை வெள்ளணுக்கள் ஒரு கியூபிக் மில்லி மீட்டரில் இயல்பளவு 5000 முதல் 10000 வரை ஆகும். இதை 5000-1000 cells/cumm என குறிக்கப்படும்.
இரத்தச் சிவப்பணுக்கள் இயல்பளவு வளர்ந்த ஆண்களில் 4.5 முதல் 5 மில்லியன் 1கியூ. மி.மீ. பெண்களில் 3.9 முதல் 4.5 மில்லியன் / கியூ மி.மீ. சிவப்பணுக்கள் வட்ட வடிவாகவும் ஓரங்கள் தடித்தும் நடுப்பகுதி மெலிந்தும் இருபக்கமும் குழிவுடனும் மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதியாகும். சிவப்பணுவில் உட்கரு ஊண்மம் எனப்படும் புரோட்டோபிளாசத்தில் ஹீமோகுளோபின் எனப்படும் நிறமிப் பொருள்தான் சிவப்பணுக்களுக்கும் இரத்திற்கும் சிவப்பு நிறத்தை கொடுப்பதாகும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் விழுக்காடு குறைவாக இருக்கும்போது இரத்த சோகை இருப்பதாகக் குறிப்பிடுகிறோம்.

Lemon Twist Blogger Template is an extremely beautiful blogger template created by JackBook.Com based on Lemon Twist Wordpress themes by farfromfearless.com. You can edit this words into your own.