மருத்துவம் அறிவோம்
रोगों के बारे में पता - ईगरै शिवकुमार सुब्बुरमण - நோய்களை பற்றி அறிந்து கொள்வோம் - ஈகரை சிவகுமார் சுப்புராமன்நொறுங்கும் எலும்புகள்… [ஆஸ்டியோபோரோசிஸ்]
- Posted: 3:59 AM
- |
- Author: சிவகுமார் சுப்புராமன்
- |
- Filed under: ஆஸ்டியோபோரோசிஸ்
ஆஸ்டியோபோரோசிஸ் பற்றி சில புள்ளிவிவரங்கள் நம்மை அதிர வைக்கும்.
1. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது கால்சியம் சத்தில்லாமல், எலும்புகள் தேய்ந்து, நொறுங்கி, எலும்பு முறிவு ஏற்படுத்துவது என்பதே.
2. 35 வயதுக்கும் மேல் குறிப்பாக பெண்களுக்கு எலும்பு தேய ஆரம்பிக்கும். 50 வயதை தாண்டினால், இத்தைகைய நோய் தலைதூக்க ஆரம்பிக்கும். ஆனால் எல்லாருக்கும் வராது. மிக மோசமான நிலையில் தான் வரும்.
ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் 500 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியா மட்டுமல்ல, ஆசியாவிலேயே பலரும் குறைவாகத்தான் எடுத்துக்கொள்கின்றனர்.
3. ஆண்களை விட, பெண்களுக்கு தான் இது வரும். அதுவும், ஆண்களை விட நான்கு மடங்கு அதிகமாக வர வாய்ப்புண்டு.
4. இந்தியாவில் மொத்தம் மூன்றுகோடி பெண்களுக்கு இந்த நோய், பல கட்டங்களில் உள்ளது. அதுவும் 50 வயதான பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.
5. நாம் உடலில் மொத்த 99 சதவீதம் கால்சியம் எலும்புகளில் தான் இருக்கிறது. அது ஆண்டுகள் கழிந்த பின், குறைய ஆரம்பிக்கும், அதனால், எலும்புகள் தேயும். இப்படி தேய்ந்தால் ஏற்படுவது தான் இந்த நோய்.
6. வாழ்க்கை முறை மாறிவிட்ட நிலையில், இப்போதுள்ள தலைமுறையினர் பலருக்கும் அவர்கள் 50 வயதை தாண்டினால், இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
7. சிறிய வயதில் இருந்தே கால்சியம், நம் உணவுகளில் இருக்க வேண்டும். அப்போது தான் உடலுக்கு தேவையான கால்சியம் தொடர்ந்து கிடைத்துவரும். இல்லாவிட்டால், எலும்புகளுக்கு கால்சியம் குறைந்து தேய ஆரம்பித்துவிடும்.
8. மாதவிடாய் நின்ற பின்னர், பெண்களுக்கு எலும்பு தேய்மான பாதிப்பு ஆரம்பிக்கும். சிலருக்கு பரம்பரை மூலமும் இது ஏற்பட வாய்ப்புண்டு.
9. கர்ப்பிணிகளில், தாங்கள் சுமக்கும் கருவுக்கு, 25 முதல் 30 கிராம் கால்சியம் தேவைப்படுகிறது. அதனால், கால்சியம் தேவை, பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதாவது, ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு, இந்தியாவில் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
10. தொடர்ந்து பால் குடித்துவந்தாலே போதும், கால்சியம் சத்து உடலில் நீடித்து நிற்கும். கால்சியம் மாத்திரைகளும் பயன்தரும்.

Lemon Twist Blogger Template is an extremely beautiful blogger template created by JackBook.Com based on Lemon Twist Wordpress themes by farfromfearless.com. You can edit this words into your own.
ராமய்யா... said:
நல்ல பதிவு...
நன்றி..
Please remover word verification