மருத்துவம் அறிவோம்
रोगों के बारे में पता - ईगरै शिवकुमार सुब्बुरमण - நோய்களை பற்றி அறிந்து கொள்வோம் - ஈகரை சிவகுமார் சுப்புராமன்Dengue காய்ச்சல்
- Posted: 1:37 AM
- |
- Author: சிவகுமார் சுப்புராமன்
- |
- Filed under: Dengue காய்ச்சல்
Dengue காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் ஒரு வைரஸ் நோயாகும். இது Dengue வைரஸின் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுவது. ஒரு வகையான கொசு மூலம் இது பரவுகிறது. வெப்ப மண்டல மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது.
நோய் அறிகுறிகள் :
1. காய்ச்சல், திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு, 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல் உஷ்ணம் திடீரென அதிகரித்தல்.
2. சருமத்தில் வேனற்கட்டிகள், அல்லது வெடிப்புகள், நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி, முகம், கை, கால்கள் என்று பரவ தொடங்கும்.
3. தசை வலி.
4. மூட்டுகளில் வலி.
5. தலைவலி.
நோய்க் கணிப்பு :
வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல்.
த்ராம்போசைட்டோபீனியா : Dengue காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (platelets) எண்ணிக்கை குறைவாக காணப்படும்.
Dengue வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டி-பாடி என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும்.
1990 ஆம் ஆண்டுகளில் கொசு மூலம் பரவும் முக்கியமான நோயாக Dengue இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இதற்கு பாதிப்படைந்துள்ளனர். இது ஒரு தொற்று நோயாக பரவும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சுமார் 2.5 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.
Aedes aegypti என்ற கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்கு ஆசியா, இந்தியா, மற்றும் அமெரிக்க வெப்பமண்டல நாடுகளில் Dengue காய்ச்சல் அதிகமாக வருகிறது. வெப்பமண்டல நாடுகளில் இது மிகவும் சகஜமாக தோன்றுகிறது. மக்கள் நெரிசல், தண்ணீரை திறந்த வெளியில் சேமிப்பது, பாசன கால்வாய்கள் ஆகியவைகளில் இந்த வகை கொசுக்கள் அதிகம் முட்டையிடுகின்றன.
சிகிச்சை :
Dengue காய்ச்சலை பொறுத்தவரை, ஓய்வும், திரவங்கள் வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படுவதும், உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டாமினோஃபென் மாத்திரைகள் ஆகியவை அவசியம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம். இதற்கான தகுந்த ஆலோசனைகளை உங்கள் மருத்துவர் வழங்கக்கூடும். ரத்த வட்டுக்கள் அளவு 40,000-த்திற்கும் குறைவாக இறங்கும்போது புதிய ரத்தமோ அல்லது ரத்தவட்டுக்கள் நிறைந்த ஊனீர் (பிளாஸ்மா), அதாவது பி ஆர் பி ஏற்றப்படும்.
கொசுக்கடிகளிலிருந்து நம்மை பாதுகாப்பதன் மூலம் இதனை தடுக்கலாம். பாதுகாப்பான உடைகள், கொசு விரட்டிகள் இவைகளின் பங்கு அவசியமாகும். வாழ்விடங்களுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் வெள்ள காலங்களில் எந்த நீரையும் நன்றாக காய்ச்சிய பிறகு பயன்படுத்துவது மிக மிக அவசியமாகும்.

முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
- Posted: 6:21 PM
- |
- Author: சிவகுமார் சுப்புராமன்
- |
- Filed under: முகப்பரு வரக் காரணம் என்ன?

STD, HIV, எயிட்ஸ்
- Posted: 1:57 PM
- |
- Author: சிவகுமார் சுப்புராமன்
- |
- Filed under: HIV STD எயிட்ஸ்
STD, HIV, எயிட்ஸ் இவற்றின் வேறுபாடுகள் யாவை?
STD என்பது பொதுவாக பாலுறவால் பரப்பப்டும் வியாதிகள். சில சமயங்களில் இவை பாலுறவால் பரப்பப்படும் தொற்று எனவும் கூறப்படும். உடலுறவு கொள்ளும்போது இருபாலரிடமும் தோன்றும் திரவத்தின்மூலம்இ பெண் ஆண் உறுப்புகளின் தோல் மூலமும் நோய் பரவும்.
HIV வைஸ் என்பது ஆண், பெண் இருபாலாரின் உள் உறுப்பிலிருந்து உடல் உறவின்போது வெளியேறும் ரத்தத்திலும், திரவத்திலும் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். இதற்கு மருந்தோ குணமோ இல்லாததால் மரணமே சம்பவிக்கும்,
HIV தொற்றின் மூலம் ஏற்படும் மரணத்தின் நுழைவாயில் தான் AIDS. இத்தொற்றுக்கிருமியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஆபத்தும் அதிகம். ஏய்ட்ஸ் நோயாளியிடமிருந்து பரவும் எய்ட்ஸ் கிருமி மிகவும் அபாயகரமானது எளிதில் தொற்றக் கூடியது.
HIV என்பது என்ன?
HIV என்பது மனிதனுக்கான எதிர்ப்புசக்தியுள்ள வைரஸ் ஆகும், CD4 என்பபடும் வெள்ளை இரத்தசெல்கள் எதிர்ப்பு சக்தி வைரஸ்ன் பணிகளில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. HIV மெதுவாகவும் சீராகவும் இவ்வைரஸ்களை அழிக்கிறது, (1 கன மி, மீ ரத்தத்திற்கு 200 செல் என்ற விகிதத்திற்கு குறைந்தால் அதுவே மரணத்தின் எல்லையெனக் கொள்ளலாம்.
வைரஸ் என்றால் என்ன?
வைரஸ் என்பது நோய் உண்டாக்கக்கூடிய ஒரு செல் கிருமி.. இந்த வைரஸ் ஒரு புதிய செல்லில் நுழைந்து அதை அழித்துவிடும்.
HIV+ என்றால் என்ன?
HIV+ என்பது ஒருமனிதன் HIVயால் பிடிக்கப்பட்டுள்ளான் என்பதையும் HIV- என்பது HIVயால் தாக்கபடவில்லை என்பதையும் குறிக்கும்.
AIDS என்றால் என்ன?
எதிப்பு சக்தியற்ற காலக்கட்டம் என்பதேயாகும், இது பரம்பரை நோய் அல்ல. HIVயால் பாதிக்கப்பட்ட தனிநபரின் தொற்று. HIV (கிருமி) ஒருமுறை உடலில் நுழைந்துவிட்டால், அது மெதுவாகவும் சீராகவும் CD4 என்ற எதிர்ப்புசக்தியுள்ள செல்களை அழித்து, AIDS என்ற சாவை நோக்கிப் பயனாக்கும் காலகட்டத்திற்குக் கொண்டு சென்றுவிடும்,
இத்தொற்று பரவுவதற்கான வகைகள் யாவை?
இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலுள்ள இரத்தத்திலும், ஆணின் உள் உறுப்பிலும், பெண்ணின் உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவங்களிலிருந்தும், தாய்ப்பாலிலும் இந்த வைரஸ் இருக்கும், உடலுறவிமன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கும், தாய்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கும் பரவும், உடலுறவின் மூலம் பரவுவதே மிக அபாயகரமானது. சரியாக சுத்திகரிக்கப்டாத ஊசிகள் (injection needles) அல்லது ஒரே ஊசியை உபயோகித்து பலருக்குப் போடப்படுவதன் மூலம் இந்த வைரஸ் பரவும்,
HIV,AIDS ஒரு மனிதனை எவ்வளவு நாட்களில் தாக்கத் தொடங்கும்?
HIV வைரஸ் மனிதனின் ரத்தத்தில் நுழைந்தவுடனேயே CD4 செல்களை அழிக்கத் தொடங்கிவிடும். வைரஸ்யின் இனவிருத்தி தொடங்கியதுமே அது அங்கேயே வாழ ஆரம்பித்துவிடும். அதன்பின் அதனை நம்மால் அழிக்க இயலாது.
HIV,AIDS பரம்பரையா?
இல்லை. உடலுறவினாலும் (பாதிக்கப்பட்டவரிடம்) பாதிக்கப்பட்டவரின் ரத்தம் காயங்களிலோ, இரத்தத்தானம் மூலமோ பரவும்.
HIV,AIDS ஏன் குணமாக்கப்படமுடியவில்லை?
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 1) இந்த செல்லை மட்டும் இனம் கண்டு நம்மால் அழிக்கமுடியாது. 2) வைரஸ் செல்களில் தொற்றியுள்ளதா இல்லையா என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. 3) வைரஸ் செல்களில் நீண்ட நாட்கள் இருக்கக்கூடும். மருந்துகள் தொற்று செல்கள் யாவற்றையும் அழித்தாலும் அவை மறுபடி மருந்துகளை நிறுத்தியவுடன் தோன்றக்கூடும் 4) அம்மருந்துகளையே ஜீரணிக்ககூடிய தன்மை உடையது அந்த வைரஸ்.
ஹோமியோபதி அல்லது ஆயுர்வேதம் மூலம் பயனடைய முடியுமா?
நமக்குத் தெரிந்தவரை எந்த ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி மருந்துகள் முற்றிலுமாக இந்த வைரஸ் கிருமிகளை அழிக்கவோ இயலாது. சில ஆயுர்வேத மருந்துகள் எதிர்ப்புசத்தியை அதிகரிக்கச் செய்யுமேயன்றி HIVஐ முற்றிலும் குணமாக்க இயலாது. அநேக பேர் ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி மூலம் இதைக் குணமாக்க முயல்கிறார்கள். ஆனால் இவையாவும் பொய்யானவையே. குணமாக்குவதாக கூறி ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள் மேற்படியான மருத்துவர்கள்,
இதுவரை (இதற்கான) HIV,AIDSசுக்கான தடுப்பூசிகள் ஏன் இல்லை?
இதற்குப் பலகாரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை
1) இத்தடுப்பூசிகளின் மூலம் நோய்த்தடுப்பு சக்தியின் வீரியமே கூட குறையலாம் 2) நோய் எதிர்ப்பு சக்தித் திறனைத் துல்லியமாகக் கணக்கிட இயலாததால் 3) வைரஸ்களின் உற்பத்தித்திறனைக் கணக்கிட இயலாததால் 4) தடுப்பூசியின் திறனைத் துல்லியமாக கணக்கிட முடியாததால் 5) அறிவியல் பயிற்சிக் கூடங்களில் செய்யப்படும் ஆய்வுகள் மனித உடலில் இவ்விஷயத்தில் சரிவதாது என்பதாலும்.
HIV எவ்வாறு பரவுகிறது?
HIV பரவுவதற்குகான வெவ்வேறு வகைகள் இத்தொற்று பாதிக்கப்பட்பவர்களின் உடலிலிருந்து வெளியேறும் இரத்தம் மற்றும் ஆண் பெண் உடலுறுப்புகளிலிருந்து வெளியேறும் திரவங்கள் ஆகியவை மூலமே பெரும்பாலும் இத்தொற்று பரவுவதற்கான முக்கியக்காரணமாகும். பாதிக்கப்பட்ட தாய் தன் குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பால் மூலம் அக்குழந்தைக்குப் பரவுகிறது, சுத்திகரிக்கப்படாத ஊசிகள் மூலமும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் போடப்படும், ஊசியை சுத்தம் செய்யாமல் அதே ஊசி மூலம் மற்றவருக்கும் போடுவதாலும் இத்தொற்று பரவுகிறது,
HIV,AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தொடுவதாலோ, முத்தம் கொடுப்பதாலோ, பிளேடு மற்றும் ஊசியால் குத்தினாலோ இந்நோய் வரவு வாய்ப்புள்ளதா?
HIVஅல்லது AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் உங்களது ரத்தத்துடன் ஏதேனும் ஓர் முறையில் கலந்தாலன்றி நீங்கள் தாக்கப்பட வாய்ப்பில்லை. மற்றபடி முத்தம் கொடுப்பதாலோ, தொடுவதாலோ இத்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதே மருத்துவர்களின் கருத்தாகும்.
பாதிக்கப்பட்டவர்களுட்ன உடலுறவு வைத்துக் கொள்ளாவிட்டாலும் கூட AIDS வருவதற்கான வாய்ப்பு உண்டா?
ஆம் வாய்ப்பு உள்ளது. 1) இந்நோய் உள்ளவரின் உடலிலிருந்து வெளிவரும் ரத்தம், அசந்தர்ப்பமாக அவரின் உடலுக்குள் செலுத்திய ஊசி சுத்திகரிக்கப்படாமல் வேறொருவர் உடலில் செலுத்தப்பட்டால் அந்த ஊசியின் மூலம் பரவ வாய்ப்புள்ளது. 2) அசந்தர்ப்பமாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உபயோகித்த கத்தி, ஊசி போன்றவற்றை உபயோகிப்பதால் பரவ வாய்ப்புள்ளது, இது பெரும்பாலும் டாக்டர்களுக்கோ அல்லது நர்ஸ்களுக்கோ ஏற்படும் அபாயமாகும், 3) போதை ஊசி போட்டுக் கொள்பவர்க்ள் மேற்கூறியபடி இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஊசியைப் பகிர்ந்து கொள்வதால் (பாதிக்கப்பட்டவர் உபயோகித்த அதே ஊசியை உபயோகப்படுத்தினால்) பரவும்.
HIV பாதிக்கப்பட்டவருடன் ஒரு பெண் காண்டம் உபயோகித்து உடலுறவு வைத்துக்கொண்டால் அப்பெண் பாதிக்கப்படுவாரா?
காண்டம் உபயோகிப்பதால் உடலுறவு கொள்ளும்போது பாதுகாப்பாக உணரலாமே தவிர 100% பாதுகாப்பாணது அல்ல. சில சமயங்களில் காண்டம் கிழிந்து போய் பாதிக்கப்பட்டவரின் செமன் மற்றவருக்குப் பரவ வாய்ப்புள்ளது, ஆண் அல்லது பெண் காண்டம் உபயோகப்படுத்தும் போது சரியான முறையில் வைக்கப்படாவிட்டாலும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே காண்டம் உபயோகிக்கும்போது இருபாலாருமே இதுபற்றிப் பேசி முடிவு செய்ய வேண்டும்.
திருமணத்திற்கு முன் வைத்துக் கொள்ளும் உடலுறவினால் AIDS வர வாய்ப்பு அதிகமாகவும் அதே சமயம் திருமண வாழ்க்கையில் ஏற்படாமலும் இருக்கக் காரணம் என்ன?
திருமணத்திற்கு முன் ஒரு ஆண் ஒரே பொண்ணுடன் உறவு வைத்துக் கொண்டாலும் அப்பெண் அல்லது ஆண் HIVஆல் பாதிக்கப்படாதவரை கவலையில்லை. ஆனால் இருவரில் யாருக்கு இந்நோய் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம், தவிர திருமணத்திற்கு முன் ஒரு ஆண் அல்லது பெண் பலருடன் உடலுறவு கொள்வதாலேயே இந்நோய் வருவதற்கும், பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. திருமணத்திற்குப் பின் என்றும்போது அப்பெண்னைப் அல்லது ஆணைப் பற்றிய முழுவிபரமும் தெரியவரும்,
காண்டம் 100% AIDSக்குப் பாதுகாப்பானதா?
காண்டம் உபயோகிப்பதால் அல்லது ஆணில் உள் உறுப்பிலிருந்து வெளியேறும் திரவம் கலக்க வாய்ப்பில்லை. சில சமயங்களில் காண்டம் உபயோகிக்கும்போது, காண்டம் வெளிவரவோ அல்லது கிழியவோ வாய்ப்புள்ளதால் அது பாதுகாப்பனது எனலாமே தவிர 100% பாதுகாப்பானது எனக் கூறமுடியாது,
ஒரு காண்டம் உபயோகிப்பதைக்காட்டிலும் இரண்டு காண்டம் உபயோகிப்பது பாதுகாப்பனதா?
இரண்டு காண்டம் உபயோகிப்பது ஒன்று உபயோகிப்பதைக் காட்டிலும் சிறிது அதிகம் பாதுகாப்பு உடையது, முன்பு கூறியபடியே காண்டங்கள் கிழிய நேர்ந்தாலோ அல்லது சரியான நேரத்தில் வைக்கப்படாவிட்டாலோ தவறு நேரிட வாய்ப்புண்டு. பெட்ரோலியம் கலந்த எண்ணைகளை காண்டத்தின் மீது தடவுவதால் காண்டத்தை அவ் எண்ணைய்கள் பலவீனப்படுத்திவிடும்,
குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டுள்ள ஒரு ஆணோ அல்லது பொண்ணோ HIV+ உள்ளவருடன் உடலுறவு கொண்டால் பாதிக்கப்படுவாரா?
குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை என்பதை குழந்தைப் பிறப்பைக் குறைப்பது அல்லது இதில் தடுப்பதுவேயாகும். இது கட்டுப்படுத்துமே தவிர பாதிப்பைக் குறைக்க வழியல்லை. இதில் ஆண்களானால் அவர்களின் விந்து அணுவும் பெண்களானால் கரு அணுவும் இந்த அறுவை சிகிச்சை மூலம் வெளிப்பட்டு ஒன்று சேர வாய்ப்பு இல்லை. HIV+ பாதிக்கப்பட்ட ஆணோடோ அல்லது பெண்ணோடோ உடலுறவு கொள்ள நேர்ந்தால் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள். (காண்டம் உபயோகித்தாருமே)
தாய்க்கு HIV இருந்து அவளது கர்ப்பத்திலுள்ள குழந்தை பாதிப்படையுமா?
கர்ப்பத்திலுள்ள குழந்தையைப்பாதிக்காது. 1) ஆனால் குழந்தை பிறந்தவுடன் நோய் தாக்கும். குழந்தை பிறப்பின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுவதால் அந்த ரத்தத்தின் மூலம் நோய் பரவ வாய்ப்பு உண்டு. 2) தாய் பாலுட்டும்போது தாய்ப்பாலின் மூலம் HIV பரவும்,
சிசேரியன் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு AIDS தாக்கப்படும் வாய்ப்வு உள்ளதா?
சுகப்பிரசவம் மூலம் (AIDS தாயிடமிருந்து) பிறக்கும் குழந்தைகளைவிட சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு AIDSன் தாக்கும் குறைவே. தாய் HIV+ஆல் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற நிலையில் மட்டுமே சிசேரியன் முறை ஏற்றது. ஆவ்வாறு தாய் HIV+ஆல் பாதிக்கப்படவில்லை என்னும்போது சிசேரியன் தேவையற்றது. இயற்கை பிரசவமே சரியானது. ஆப்ரிக்கா ஆசியா ஆகிய நாடுகளில் மருத்துவ வசதி குறைவாயிருப்பதால் மேற்குறிப்பிட்ட சிசேரியன் முறை அந்தாடுகளில் பயன்படாது. தவிரவும் இந்த சிசேரியன் அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவக்கருவிகளின் சுகாதாரமற்ற தன்மையாலும்கூட தாய் சேய் இருவருக்குமே HIV தொற்ற வாய்ப்புள்ளது.
HIV,AIDSஆல் தாக்கப்பட்ட பெண்ணின் மூலம் அவளது குழந்தையத் தாக்கக் கூடுமா?
ஆம். சுகப்பிரசவத்தின்போது பெண்ணின் உடலில் அநேக திசுக்களும் தசைகளும் கிழியவும் அவற்றின் மூலம் இரத்தம் வெளியேறி குழந்தையைப் பாதிக்கும். (குழந்தைக்கும் தொற்றும்)
சுய இன்பச் செயல்பாட்டினால் AIDS தாக்கக்கூடுமா?
சுய இன்பச் செயல் பாடடின் மூலம் HIV,AIDS பரவாது, ஓர் ஆண் பெண் தனக்குத்தானே செயலில் ஈடுபடுவதால் இதில் HIVக்கான வாய்ப்பு இல்லை. இதே செயலை இருவர் (ஒரேஇனம்) செய்தால்இ இந்த இருவரில் யாரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மற்றவரும் HIVயால் பாதிப்படைவர்.
ஓரு தந்தையின் மூலம் குழந்தைக்குப் வரவுமா?
புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தந்தையால் எந்த பாதிப்பும் இல்லை, தந்தையின் மூலம் தாய்க்கு முதலில் பரவி பின் குழந்தை பிறந்தவுடன் அது குழந்தைக்கும் பரவுகிறது.
HIV,AIDS இரத்தத்துடன் எவ்வாறு கலக்கிறது?
HIV,AIDS பாதிக்கப்பட்ட ஒருவருடன் மற்றவர் இரத்த சம்பந்தமோ, உடலுறவின்போது ஏற்படும் திரவச் சேர்க்கையாலோ பரவும்போது இந்த வைரஸ் (கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில்) ஒரு புதிய செல்லில் நுழைய இடம் தேடிவிடும், அதன்பின் HIV அந்த செல் சுவர்களை அழித்து நுழைந்து தனது உற்பத்திச் சுழற்சியை ஆரம்பித்துவிடும்.
இரத்த அணுக்களே HIV,AIDSன் விருந்தாளி என்றால் உடலுறவு எப்படி பாதிக்கும்?
HIV,AIDS வைரஸ்கள் இரத்த அணுக்களிலேயே அதிகம் காணப்பட்டாலும் உடலிலுள்ள மற்றதிரவங்களிலும் இந்த வைரஸ்கள் அதிகம் இருக்கும், பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் மூலம் ஆணின் விந்தணு மூலமும் பரவ அதிகபட்ச வாய்ப்பு உள்ளது, சில சமயங்களில் உடலுறவின்போது ஏற்படும் இரத்தப் போக்கினாலும் பரவ பாய்ப்புண்டு.
ஒருவன் HIV,AIDSஆல் எவ்வளவு காலத்திற்குள் தாக்கப்படுவான்?
HIV வைரஸ் இரத்த ஓட்டத்தில் கலந்தவுடனேயே CD4 செல்களை அழிக்கத்துவங்கும். இந்த வைரஸ்களின் உற்பத்திப் பெருக்க சுழற்சி துவங்கியதுமே முன்னேறிக் கொண்டிருக்கும். உயிர் உள்ளவரை எதுவும் செய்ய இயலாது.
HIV,AIDS பாரம்பரியத்தைப் பொறுத்ததா?
இல்லை. HIVன் பாதிப்புக்காளான ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதேயாகும். இதற்கும் பரம்பரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தனிப்பட்டவரின் உடலை எவ்வாறு பாதிக்கிறது? HIV தொற்றின் நிலைகள் யாவை?
HIV மூன்று விதமாகக்கணிக்கபடுகிறது 1) ஆரப்பநிலை 2) தீவிரமானது 3) எய்ட்ஸ்.
1) ஆரம்பநிலை
HIV பரவி 3 முதல் 6 மாதங்கள் வரை, இந்நிலையில் வைரஸ் கிருமிகள் தீவிரமாக விருந்தியாகும், நோய் எதிர்ப்புசக்தி குறையத் தொடங்கும். வைரஸ் தீவிரமாவதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகப் வரவும்.
2) தீவிரமானது
சாவுக்கும் வைரஸ்க்குமான இடைப்பட்ட நேரம். உடலைத் தொடர்ந்து அழித்துக்கொண்டே நிலையாயிருக்கும், CD4ன் எண்ணிக்கை மெதுவாகக் குறையத்துவங்கும். இந்திலை 2டில்லிருந்து 10 ஆண்டு வலையிலான எண்ணிக்கையிலிருக்கும், இந்தகாலகட்டம் அம்மனிதனின் உடல்நிலையையும் வைரஸையும் பொறுத்தது.
3) எய்ட்ஸ்
CD4ன் எண்ணிக்கை மிகக்குறைந்தநிலையும் வைரஸ் எண்ணிக்கை அதிகப்படுவதுமே ஆகும். இக்காலகட்டத்திலேயே மற்றவருக்கு பரவ அதிக வாய்ப்புள்ளது. CD4ன் எண்ணிக்கை பூஜ்யமானபோது கூட துணை காரணமாகவே இது சாத்தியமாகும். நோயைப் பரப்பாமலிருக்க உள்ள காரணங்களை நோயாளிக்கு விளக்க வேண்டியது அவசியம்,
HIV தொற்றின் அடிப்படை அறிகுறிகள் யாவை?
ஆரம்ப நிலையில் HIV வைரஸ் தொற்றிய பின் 3 முதல் 6 மாதங்களில் மாறுதல்கள் தெரியரும், இக்கட்டத்தில் இவ்வைரஸ்கள் அபிவிருத்தி அடைந்து நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். இன்புளுயன்ஸா போன்ற நோய்களும் தலைவலி, சக்தி இழப்பு, காய்ச்சல், குளிர், வயிற்றுப்போக்கு ஆகியவை நோயாளிக்கு வரலாம். இவையாவும் இருவாரத்தில் குணமாகிவிடக்கூடும். இதைக்கொண்டு HIVஜக் கண்டுபடிப்பது கடினம், இந்த அறிகுறிகள் மறைந்த பின்னும்கூட HIV வைரஸ்கள் உடலில் தங்கியிக்கக்கூடும். ஆகவே இரத்தப்பரிசோதனை செய்வதே எல்லாவாற்றிலும் சிறந்ததாகும், இன்புளுயன்சா, அம்மை போன்ற வைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நோய் குணமாகி 3 மாதம் கழித்தபின் பாரக்கப்படும் இரத்தப் பரிசோதனைக்கே நாம் சிபாரிசு செய்கிறோம். ஏனெனில் அதன் பின்பே சரியான முடிவுதெரியவரும். ஆகவே பொறுத்திருந்து சொதனை செய்வதே சரியானதாகும்,
HIVன் தீவிர நிலைக்கான (Chronic) அறிகுறிகள் யாவை?
HIVன் தீவிர நிலை ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்தும், அவர் உடலைப் பேணும் முறையிலும், தொற்றின் தீவிரத்தையும் பொருத்தது, இத் தொற்று உள்ளவர்கள் இன்புளுயன்சா வயிற்றுப்போக்கு போன்றவைகளுக்கூட (குணப்படுத்த) அதிகநாட்கள் மருந்துகள் எடுத்துக் கொள்ள நேரும். பின் இவையே நிமோனியாவில் கொண்டு விடலாம். வயிற்றுப்போக்கு முதல்கட்ட மருந்துகளில் குணமாகாமல் மாதக்கணக்கில்கூட ஆகலாம், எடை குறைவு, தலைவலி, புண் முதலிய வரலாம்,
HIV,AIDS மூலம் ஒருவன் எப்போது பாதிக்கப்டடுவான்? (தாக்கப்படுவான்)
HIV வைரஸ் ஒரு மனிதனின் இரத்தத்தில் கலந்து CD4 செல்களை அழிக்கத் தொடங்கியதுமே அவன் பாதிக்கப்படுவான். வைரஸ்ன் உற்பத்தி சுழற்சி ஆரம்பமானதுமே அம்மனிதன் பாதிக்கப்படுவான்,
HIV தாக்கப்பட்ட நபர் 10 ஆண்டுகளில் இறந்து விடுவான் என்பது எவ்வளவு தூரம் சரியானது?
இல்லை. 10 ஆண்டுகள் என்பது சராசரியாக கூறப்படுவது, அமெரிக்காவில் சமீபத்தில் கண்டுபிடித்துள்ள மருந்துகளின் மூலம் அதிகநாள் வாழ முடியும். இம்மருந்துகளைப் பயன்கடுத்தி 15 அல்லது அதற்கும் மேலே கூட ஆரோக்யமாக வாழ்பவர்களும் உள்ளனர். ஆகவே HIV ஆல் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். அவர்கள் உடல்வாகு, அவரக்களின் உடலின் நோய் எதிர்ப்புசக்தித்திறன் இவைகளைப் பொறுத்தது.
HIV தாக்கப்பட்ட ஒருவன் எவ்வளவுகாலம் உயிர்வாழ முடியும்?
சாதாரணமாக HIV தாக்கப்பட்டவர்களின் வாழ்வு தோராயமாக 10 ஆண்டுகள். இது தனிமனிதனுக்கு மனிதன் மாறுபடும். அவன் உட்கொள்ளும் உணவு உட்கொள்ளும் மருந்துகள், உடல்வலிமை, மனவலிமை இவற்றைப் பொறுத்தே அமையும். தாக்கப்பட்டுள்ள வைரஸ் தன்மையையும் பொறுத்தது.
AIDS அதிகமானபின் எவ்வளவு நாட்கள் வாழ முடியும்?
அம்மனிதன் எடுத்துக்கொள்ளும் சிகிச்கையைப் பொறுத்தது. சில வாரங்களோ சில ஆண்டுகளோகூடச் சொல்லலாம், ARV மருந்துகளை உட்கொண்டு சிலர் அதிக நாட்கள் உயிருடன் உள்ளனர்,
உடலுறவு என்றால் என்ன?
ஆணின் உறுப்பு பொண்ணின் பிறப்பு உறுப்பினும் செலுத்துவதே ஆகும்,
வாய்மூலம் உடலுறவு கொள்வதை சிலர் விரும்புவது ஏன்?
ஒருவர் மற்றவரது பிறப்பு உறுப்பின் மீது வாய் வைத்து உறவு கொள்வது. மனக்கிளர்ச்சியை அதிகரிப்பதால் விரும்பப்படுகிறது,
வாய் மூலம் உறவு கொள்வது ஏன் அபாயகரமானது?
வாயில் ஏதேனும் காயம், அல்லது ஈறுகள் பாதிக்கப்பட்டிருந்தால் HIV அதன் மூலமாக விந்தனுவினுள் புகுந்து விடக்கூடும், விந்தனுக்குள் வாயில் புகாதபடி தடுக்க ஆணுறையை உபயோகிப்பது நல்லது.
Anal Sex
இது அதிகப்பரபரப்பை ஏற்படுத்துவதால் சிலர் இதை விரும்புகிறார்கள், ஒரு ஆணின் பிறப்பு உறுப்பு பெண்ணின் ஆசனவாயில் நுழைவதையே இவ்வாறு கூறுகிறோம்,
ஓரிசை சேர்க்கை என்றால் என்ன?
ஒரு ஆண் மற்றொரு ஆணால் கவரப்பட்டு உடலுறவு வைத்துக் கொள்வதையோ அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணால் கவரப்பட்டு உடலுறவு கொள்வதையோ ஓரினச் சேர்க்கை என்கிறோம்,
Bisexuality
ஆண் பெண் இருபாலாருமே ஒருவர் மற்றொருவரால் கவரப்படுவதே ஆகும்,
Lesbianism
ஓரு பெண்ணும் மற்றொரு பெண்ணின் மீது ஏற்படும் பாலுணர்வு.
ஓரிசை சேரக்கை, Lesbianism இவைகளால் ஏற்படும் பிழை என்ன?
பொரும்பாலானவர்கள் வலதுகைப் பழக்கமுடையவராயிருக்கும் போது சிலர் மட்டும் இடதுகைப் பழக்கம் உள்ளவராயிருக்கின்றனர், பிறப்பில் சாதாரனமாயிருந்தாலும் சிலர் சொல்வதைக்கேட்டு இடக்கைப்பழக்கத்திற்கு ஆளாவது போலவே ஓரினச்சேர்க்கை உள்ளவர்கள் தன் இனத்தவர்களையே (ஒரு ஆண் ஒரு ஆணையோஇ ஒரு பெண் மற்றொரு பெண்ணையோ) கவர்கிறார்கள் அல்லது கவரப்பட்டு (ஈர்க்கப்பட்டு) உடலுறவி கொள்கிறார்கள், இதனால் தவறு எனச்சொல்ல முடியாவிட்டாலும் இயற்கைக்கு மாறாக உள்ளதால் கேலிக்கு ஆளாகிறார்கள். இவர்களை தண்டிக்கிறார்கள் அல்லது அடிக்கிறாரகள். அவர்களிடம் விழிப்புணர்வை உண்டாக்குவது நலம்,
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு AIDS வருமா?
ஆம். Anal sex மூலமாக உடலுறவு கொள்பவர்களுக்கு நிச்சயம் HIV தாக்க அதிக அளவு வாய்ப்பு உள்ளது. ஆசனவாயின் சுவர்கள் மிக மெல்லியதாயிருப்பதாலும் அதன் மூலம் உடலுறவு கொள்ளும்போது இரத்தம் கசிவதாலும் வைரஸ்கள் உள்ளே (மற்றவரின் இரத்தத்தில்) கலப்பது எளிதாகிவிடுவதால் HIV பரவவாய்ப்பு அதிகம், லெஸ்பியன்களுக்கு AIDS வரவாய்ப்பு அதிகமா?. மற்றவர்களைக் காட்டிலும் வாய்ப்புக் குறைவு.
ஆபாயகரமான உடலுறவிக்குப்பின் எப்போது எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்?
அபாயமான உடலுறவுக்குப்பின் (HIV பாதிக்கப்பட்டவருடன்) அவரது விந்தணுவிலுள்ள வைரஸ் மற்றவரது இரத்தத்தில் கலப்பதால் பாதிப்படைவர். சில மணி நேரங்களுக்குள்ளாகவே இவை நடந்துவிடும், சில சமயங்களில் மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்ஸ்கள் உடலில் HIV பாதிக்கப்பட்டவரின் ரத்தம்பட வாய்பிருந்தால் அவர்கள் உடனே தடுப்பு மருந்துகளையோ ஊசிகளையோ உபயோகிப்பர், இவை அவர்களுக்கு மட்டுமே சாத்தியம், ஆனால் இம்மருந்துகள் விலை அதிகம் என்பதாலும், நோயின் தன்மைக்குத்தக்கபடியும், தாக்கியுள்ள மனிதனைப் பொறுத்து கொடுக்கப்பட வேண்டும். கட்டுப்படுத்தமுடியுமே தவிர முற்றிலுமாக அழிக்கவோ, ஒழிக்கவோ இயலாது.
உடலுறவு எந்தவகையில் வைத்துக்கொள்ளாதபோதும் HIV வருமா?
ஆம். வரும். எந்த வகையிலாவது HIV பாதிக்கப்பட்டவரின் இரத்தம் உங்கள் இரத்தத்துடன் கலக்க வாய்ப்பிருந்தால் வரும்,
உடலுறவு இல்லாமலேயே AIDS வருமா?
ஆம் 1) AIDS தாக்கப்பட்டவரின் உடலில் செலுத்தப்பட்ட ஊசி (injection nddele) சுத்திகரிக்கப்படாமல் உங்கள் உடலில் செலுத்தப்பட்டால் 2) அகஸ்மாத்தாக AIDS பாதிக்கப்பட்டவர் உபயோகித்த ஊசி அல்லது கூரான ஆயுதத்தை நீங்களும் கையாள நேர்ந்தால் 3) டயாபடீஸ்காரர்கள் போன்றோர் கட்டுப்படுத்த போட்டுக்கொள்ளும் ஊசியைப் பகிர்ந்து கொள்வதால் (HIV,AIDS உள்ளவரிடமிருந்து) 4) தாய்ப்பால் மூலம் 5) அறுவை சிகிச்கையின் போதோ, விபத்தின்போதோ 6) சுத்திகரிக்கப்படாத ஊசியை மருத்துவர் அல்லது நர்சுகள் உபயோகித்தால்.
சுய இன்பத்தினால் (Masturbation) AIDS வர வாய்ப்புள்ளதா?
சுய இன்பம் என்பது ஆண் அல்லது பெண் தனக்குத்தானே ஏதோ ஒரு விதத்தில் தன் அவயவங்கள் மூலம் இன்பம் காண்பது, இப்படிபட்டவருக்கு AIDS வரவாய்ப்பு இல்லை. ஆனால் வேறு ஒரு நபர் (அவர் AIDS ஆல் தாக்கப்பட்டவராயிருப்பின்) உடன் தொடர்பு கொண்டால் AIDS வர வாய்ப்பு உண்டு.
HIV தாக்கப்பட்டவருடன் உடலுறவு கொண்டால் AIDS தாக்கப்படக்கூடுமா?
HIV தாக்கப்பட்டவருடன் எப்போது உடலுறவு கொண்டால் வருமா இல்லையா என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தாக்கப்பட்டவரின் வைரஸ்சின் தன்மையைப் பொறுத்தே உள்ளது, இதை முன்கூட்டியே தெரிந்துக்கொள்ள முடியாது. HIV தாக்கப்பட்டவருடன் ஒரே ஒருதடவை உடலுறவு வைத்தபோதுகூட மற்றவர் தாக்கப்படுவார் என்பதே சரியான தகவல்.
அதிகம் அபாயம் விளைவிக்கும் வகைகள் யாவை?
செய்யும் தொழில், அவரது வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பொறுத்தது, மேலும் விபச்சாரிகள் பலருடன் உடலுறவு வைத்திருப்பவர்கள் (அவரது HIV பற்றித் தெரியாமல்) நரம்பு ஊசிப் பழக்கம் உள்ளவர்கள் ஆகியவைகள் அதிகம் ஆபத்துவிளைவிப்பன.
விபச்சாரிகள் HIV,AIDSஆல் பாதிக்கப்படுவதன் காரணம் என்ன?
இந்தியாவில் ஒவ்வொருநாளும் இவர்கள் பலதரப்பட்ட மனிதர்களுட்ன உடலுறவு கொள்கிறார்கள், இவர்களுக்கு HIV,AIDS பற்றிய தகவல் தெரியாததாலும் பாதுகாப்பு முறைகள் பற்றி அறியாததாலுமே பாதிக்கப்படுகிறார்கள், இவர்கள் வாடிக்கையாளர்கள் யார் HIVயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிவதில்லை. வாடிக்கையாளர்கள் கூறவும் மாட்டார்கள். தவிர சில சமயங்களில் ஆணுறை உபயோகிப்பதை (விபச்சாரிகள் விரும்பினாலும்) வாடிக்கையாளர் விரும்பமாட்டார். மேலும் இதுபற்றி விபச்சாரிகள் மறுக்க முடியாத சூழ்நிலை. ஆகவேதான் விபச்சாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்,
ஒரு மனிதன் எப்போழுது ஏன் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்?
ஒரு மனிதன் தகாத உறவு வைத்துக் கொள்ளாதவரையோ, எந்தவிதத்தில் HIV தாக்கப்பட்ட மனிதருடன் இரத்தசம்பந்தம் இல்லாதவரை, தவறு நடக்கவில்லை என்பதில் உறுதியாக இருந்தால் சோதனை வேவையில்லை.
திருமணத்திற்கு முன் HIV இரத்தப்பரிசோதனை செய்வது நல்லதா?
இதற்கு எந்த சட்டமும் இல்லை. யாரும் யாரையும் நிர்பந்திக்கவும் முடியாது, எந்தத்தவறும் நடக்கவில்லை என்பதில் உறுதியாகவும் நன்னடத்தை உள்ளவராக இருப்பின் சோதனை தேவையில்லை, தனக்குத்தானே தனது இணையைத் தேடிக் கொள்பவர்கள் (காதல் ஜோடிகள்) மட்டும் தங்களது மனத்திருப்பதிக்காக சோதனை செய்து கொள்ளலாம்.
HIV,AIDSஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரிந்து கொண்டால் என்ன செய்வது?
பாதிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்டபிறகு செய்ய வேண்டியவை நான்கு 1) உடலுறவு வைத்துள்ள (இதுவரை) தங்களது இனை நபருக்கு விபரம்கூறி அவரையும் பரிசோதனை செய்துகொள்ளச் செய்தல் 2) உடலுறவை உடன் நிறுத்த வேண்டும், ஒருவேளை அந் நபரின் ஜோடி இதுபற்றித் தெரிந்தும் (HIV பாதிப்பற்றி) உடலுறவு கொள்ள விரும்புவாரேயானால், வைரஸ் பரவுவதைத் தடுக்க ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும் 3) HIV,AIDS பாதிப்புடையவர்கள் இரத்ததானம் அறவே செய்யக்கூடாது 4) மருத்துவ உதவி தேவைப்படும்போது மருத்துவரிடம் தனது. HIVயின் தன்மை பற்றி மறைக்காமல் சொல்ல வேண்டும்.
HIV பாதிப்பு என்பது உயிர் இழப்புதான் என முடிவு கட்டக்கூடாது, தற்காலத்தில் HIVயை கட்டடுப்படுத்த குறைந்த செலவுள்ள மருந்துகளும், மருத்துவ முறைகளும் வந்துள்ளன், சரியான ஆலோசனையும் சரியான மருத்துவமும் அளிக்க்க கூடிய மருத்துவரைக் கண்டு பிடித்து அவரை அணுகி அவரது ஆலோசனையை நம்பிக்கையுடன் பெற வேண்டும், தன் வாழ்நாளை எவ்வளவுதூரம் உபயோகமான முறையில் கழிக்க முடியும் என்பதைத் தன் வாழ்க்கைத் துணை, குடும்பம், நண்பர்கள் மருத்துவர்கள் மூலம் நடத்திச் சொல்ல வேண்டும். இதற்குப்பயப்படத் தேவையில்லை,
நம் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது எங்ஙனம்?
உடலுறவு சம்பந்தப்பட்ட ஆசைகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும், சில செயல்களின் மூலம் நமக்கு மகிழ்ச்சியும், பரிசும் கிடைத்தபோதிலும் சில துன்பங்களும் நேரலாம். அதுபோலவேதான் பலரால் இதைக்கட்டுப்படுத்த முடிவதில்லை. சிலர் இதை நன்கு புரிந்து கொண்டு செயல்படுகின்றனர். உடல் உதவிமட்டுமே வாழக்கையல்ல என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்,
எனது வாழ்க்கைத்துணை (partner) பாதிக்கப்படவில்லை என்பதைத்தெரிந்து கொள்வது எப்படி?
தற்காலத்தில் ஆண் பொண் இருவருமே ஒரேசமயத்தில் மருத்துவரை அணுகி HIV இரத்தப்பரிசோதனை செய்து கொள்கின்றனர். இதனால் சந்தேகம் தீர்ந்துவிடுகிறது. அதன்பின் மணவாழ்வில் ஈடுபடுகின்றனர், இதில் யாரேனும் ஒருவர் வேறு ஒருவரிடம் தொடர்புகொள்ள நேர்ந்தால் அவரின் காரணமாக (அவர்மூலம்) ஜோடியின் மற்றநபரும் பாதிக்கப்படுவார். ஆகவே வாழக்கைத்துனையின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்து கொள்ள வேண்டும்,
HIV,AIDS தாக்காமலிருக்க என்னென்ன முன்யோசனைகள் தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்?
சில எளிய தடுப்பு முறைகள்-
உடல் உறவு வைத்துக் கொள்பவரது உடல் நலம் பற்றித் தெரியாமல் உடலுறவு கொள்ளக்கூடாது.
திருமணத்திற்கு முன் எவருடனாவது உடலுறவு வைத்துக்கொண்டால் ஒவ்வொரு முறையும் ஆண் உறையை உபயோகப்படுத்த வேண்டும்,
ஆண் உறையை உபயோகிக்குமுன் அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுதல்.
நரம்பு ஊசிகளைப் பயன்படுத்தாமலிருத்தல்,
போதைப் பொருள்களை உபயோகிக்காமலும் மது அருந்தாமலும் இருப்பது.
மருத்துவர் உபயோகிக்கும் ஊசிகள் மற்றும் உபகரணங்கள் நன்கு சுத்திகரிக்கப்பட்டவைதானா என்பதைத் தெரிந்து கொள்ளுதல். இதற்கு மாறாகச் செயல்படும் மருத்துவரை அணுகாதிருத்தல்.
HIV பற்றிய உண்மைகளைப் பரப்புவது எங்ஙனம்?
HIV பற்றிய விபரங்களை முதலில் தெரிந்து கொண்டு நமது நண்பர்கள், சகோதரர்கள், பெற்றோர், உறவினர் மற்றவர்களிடம் விளக்குதல். பள்ளி, கல்லுரி மாணவர்களிடம் இது பற்றிய செய்திகளை விளக்கக் கூறுதல். ஆபாயகரமான உடலுறவு இரத்தம் மூலம் பரவுவதை விளக்குதல், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் உதவவும் வேண்டும்,
HIV பாதிக்கப்பட்டவர் இறந்துவிடுவர் எனத்தெரிந்தும் ARV சிகிச்சை அளிக்கபடுவதால் ஏற்படும் நன்மை யாவை?
ARV சிகிச்சை மூலம் பல நன்மைகள் ஏற்படும்.
நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தித்திறன் அதிகப்பட்டு அவர் குணமாக ஒரு வாய்ப்பு உண்டாகலாம்.
ஆபாயகரமான கட்டத்திலிருந்து, தொற்றுகளிலிருந்து காப்பாற்றபடலாம்.
T.B. போன்ற நோய்கள் அவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கலாம்.
ஆவரது வாழ்நாள் அதிகரித்து அவரது குடும்பத்தைப் பாதுகாக்கலாம்.
அவர்கள் அதிக சக்தியையும், நல்ல உடல் நிலையும் பெற்று நல்ல குடிமகனாக இருக்கலாம்.
அவர்கள் தன் மோசமான செயலால் (அதைச் சுட்டிக்காட்டி) மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையலாம். மற்றவர்களுக்கு விளக்கலாம்.
இரண்டாவதாக பல சமூக நலன்களும் உள்ளன-
ARV தெரப்பியால் HIV,AIDSஜ ஒழிக்க அரசாங்கம் ஏற்படுத்தியது.
இதன் மூலம் மருத்துவர், மருத்துவமனை, நர்சுகள் ஆகியோரை இதில் ஈடுபடுத்த முடியும்.
நன்னடத்தை இல்லாதவர்களையே HIV தாக்கும் என்ற இழிவை அகற்ற.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் சிகிச்சையும் உள்ளன என்பதால் அநேகர் HIV சோதனை மேற்கொள்கின்றனர்,
அவர்களின் பாதிப்புக் தன்மையை அறிந்து அதற்குத்தக்கவாறு தன் வாழ்வை மாற்றிக் கொள்கின்றனர். இதன் காரணமாக நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.
ARV தெரப்பியால் ஏற்படும் பிரச்சனைக்ள என்ன?
ARV தெரப்பி மிக செலவானதும், பல ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் எல்லோரும் அறிவர். ஓரு முன்மாதிரியான, அனுபவமிக்க மருத்துவர் ARV ஒவ்வொரு நோயாளிக்கும் என்ன மாறுதல்களை ஏற்படுத்துகிறது என்பதையும், மருந்தின் அளவு, உணவு நிர்ணயம் ஆகியவற்றையும் கவனிப்பதன் மூலம் நோயாளியின் நோய்க்கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். வைரஸ் எண்ணிக்கையை கணக்கிடுவதும், CD4 செல்லைக் கணக்கிடுவதும் மிகச் செலவானது. பெரும்பாலும் இந்தியாவில் குறைவு, ஆகவே பெரும் பாலன மருத்துவர்கள் கணக்கிடுகிறார்கள், ஆகவே இந்தியாவைப் பொறுத்தவைரை இது தவிர்க்க முடியாததேயாகும்.
HIV நோயளிக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்?
HIV நோயாளி அன்றாட வாழ்க்கை முறையில் எவருக்கும் தீங்கிழைக்க முடியாது. நோயின் காரணமாக விரக்தியடையவும் மனவலிமை உடல்வலிமை குன்றக்கூடும். அவர்களுக்கு நமது பாதுகாப்பு, அரவனைப்பு, அன்பு ஆகியவையே தேவை. நாம் அவர்களை நமது சகோதர, சகோதரிகளாக எண்ணி மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டும், இந்த நம்பிக்கையின் மூலமே அவர்கள் மேலும் சில காலம் உயிர்வாழக்கூடும்.
HIV நோயாளிகளை நாம் ஏன் கொல்ல முடியாது?
HIV நோயாளிகளால் கெடுதியும் இல்லை. அவர்களோடு நாம் பேசலாம் பழகலாம். அவர்கள் இரத்ததானம் செய்வதாலோ அல்லது தன்னிடமுள்ள HIV பற்றிக் கூறாமல் மற்றவருடன் உறவு கொண்டாலன்றி நோய் பரவ வாய்ப்பில்லை. அவர்களிடம் நாம் இது பற்றிய விழிப்புணர்ச்சி ஊட்டுவதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம். HIV, இருந்தபொதிலும் அவர்களால் நல்ல சகோதரனாக, சகோதரியாக, தாயாக, தந்தையாக சமூகத்தில் அங்கம் வகிக்க முடியும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உணர்வையும், அன்பையும் கொடுப்பதே போதுமானது.
HIV+ நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டுமா?
HIV+ நோயாளிகளைத் தனிமைப்படுத்த தேவையில்லை. அவர்களுடன் சேர்ந்து வாழவதாலோ, சேர்ந்து சாப்பிடுவதாலோ, ஒரே படுக்கையில் படுப்பதாலோ, ஒரே நீச்சல் குளத்தில் நீந்துவதாலோ, சேர்ந்து விளையாடுவதாலோ இந்நோய் பரவுவதில்லை. இரத்தத்தினாலும், உடலுறவினால் மட்டுமே பரவும். HIV+ நோயாளிகளுக்கு நமது அன்பும், ஆதரவும், அரவணைப்பும் தேவை. அவர்களை தனிமைப்படுத்துவது தர்மப்படியோ, நியாயப்படியோ சரியல்ல.
HIV உள்ளவர்கள் மணம்புரிந்து கொள்வது சட்பப்படி சரியா?
இதில் எந்தத் தவறும் இல்லை. ஒருவரது HIV பற்றித் தெரிந்தேகூட மணம்புரிந்து கொள்ளவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். ஆணுறை அணிவதன் மூலமும், மற்ற தடுப்பு முறைகளைக் கையாண்டும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

மஞ்சள்காமாலை - Jaundice
- Posted: 9:44 PM
- |
- Author: சிவகுமார் சுப்புராமன்
- |
- Filed under: மஞ்சள்காமாலை
மஞ்சள்காமாலை ஏன் ஏற்படுகிறது? அதை தவிர்ப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம்.
நம் உடலில் உள்ள மிகச்சிறந்த ஒரு உறுப்பான கல்லீரல் சுரக்கின்ற பித்தநீரின் அளவு இரத்தத்தில் அதிகமாகி பித்தப்பை பாதிக்கப்படுவதைத்தான் மஞ்சள்காமாலை என்று கூறுகிறோம்.
மஞ்சள் காமாலை நோயாளிக்கு தோல் மஞ்சளாகவும், கண்களின் வெண்படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும்.
மஞ்சள் காமாலையில் சில முக்கிய வகைகள் உண்டு.
1. அப்ஸ்ட்ரக்டிவ் மஞ்சள்காமாலை - Obstructive jaundice
அப்ஸ்ட்ரக்டிவ் (Obstructive) என்றால் அடைப்பு என்று பொருள். பொதுவாக பித்தநீர் கல்லீரலால் சுரக்கப்பட்டு பித்தநீர் குழாய் வழியாக பித்த நீர்ப்பைக்கு அனுப்பப்படுகிறது. பித்த நீர்ப்பை அதை சேகரித்து வைத்துக் கொண்டு உணவு செரித்தலுக்கு குறிப்பாக கொழுப்பு சத்துள்ள உணவு செரித்தலுக்கு தேவையான பித்த நீரை அனுப்பும் வேலையை செய்கிறது.
இந்த அப்ஸ்ட்ரக்டிவ் மஞ்சள்காமாலை என்பது கல்லீரலால் சுரக்கப்பட்ட பித்தநீர் பித்த நீர்க்குழாயில் கொலஸ்ட்ரால், பித்தக் கல் போன்றவற்றில் ஏற்படும் அடைப்பின் காரணமாக பித்த நீர்ப் பையை அடையாமல் குடலுக்குச் சென்று விடுகிறது. இவ்வாறு அடைப்பின் காரணமாக ஏற்படும் காமாலைக்கு அப்ஸ்ட்ரக் டிவ் ஜான்டீஸ் என்று பெயர். இதில் சிறு நீர்கருப்பு நிறத்திலும் மலம் வெளுத்தும் காணப்படும்.
2. ஹெப்பட்டோ- செல்லுலார் ஜான்டீஸ் Hepatocellular jaundice
இது இரண்டாவது வகை மஞ்சள் காமாலையாகும். இவ்வகை கல்லீரல் செல்கள் சில நோய்களால் பாதிக்கப்படும் போது உண்டாகிறது. இவ்வாறு கல்லீரலானது நோயால் பாதிக்கப்படும்போது அது தன் வேலையை சரிவர செய்ய முடியாத நிலையில் குறிப்பாக தன் வேலையில் ஒன்றான பித்த நீரை, பித்தப்பைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படுவதால், கல்லீரலால் சுரக்கப்படும் அந்த பித்தநீர் அங்கேயே தங்கி, ரத்தத்தில் கலந்து தேங்கிவிடுவதால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்குத்தான் ஹெப்பட்டோ- செல்லுலார் ஜான்டீஸ் என்றுபெயர். இவ்வகை நோயாளிகளுக்கு சிறுநீர் அடர்கருப்பாகவும், மலம் இயல்பான நிறத்திலும் போகும்.
மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்கள்:
* பரம்பரைத் தன்மை
* ரத்தத்தில் பித்த நீரின் அளவு அதிகரித்தல்
* கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள்
* பித்த நீர்ப்பை மற்றும் பித்தநீர்க் குழாயில் ஏற்படும் அடைப்பு
* ரத்த சிவப்பணுக்களின் சிதைவு
* மது அருந்துதல்
* மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் அலோபதி மருந்துகள்
* மாசு பட்ட தண்ணீரில் காணப்படும் நோய்க்கிருமிகள் போன்றவை.
அறிகுறிகள்:
* பசியின்மை
* சோம்பல்
* களைப்பு
* வாந்தி
* குமட்டல்
* தலைவலி
* உடல் எடை குறைவு
* உடலில் அரிப்பு
* சாதாரண காய்ச்சல் அல்லது குளிர்க்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும்.
* காமாலை முற்றிய நிலையில் தோல் பகுதி, கண்கள் மற்றும் நகப் பகுதிகள் மஞ்சளாகவும் சிறுநீர் மற்றும் மலம் மஞ்சள் நிறத்துட னும் காணப்படும்.
சிகிச்சை:
முற்றிய வேப்பிலை, வில்வ இலை, கீழா நெல்லி, தும்பையிலை, சிறிது மஞ்சள் தூள் ஆகியவைகளை சம அளவு பறித்து வந்து ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு தம்ளர் ஆகுமாறு அடுப்பில் வைத்து வற்றக் காய்ச்சி பின் வடிகட்டி காலை, மாலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக நோய் தீரும்வரை உட்கொள்ளவும்.
அல்லது மேற்கூறிய மூலிகைகளை பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்குஒரு மணி நேரம் முன்பாக தினம் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளையும் நோய் தீரும் வரை உட்கொள்ளலாம்.
உணவுமுறை:
நோயாளிகள் தினம் ஒருவேளை இயற்கை உணவுகளையும் மற்ற இரண்டு நேரம் எளிதில் ஜீரணமாகக்கூடிய சாதாரண சைவ உணவுகளை மட்டும் உட்கொள்ளவும். இதில் அவரவர் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ளலாம். இயன்றவரை உப்பை குறைத்து உண்ணவும். இவ்வாறு செய்தால் மஞ்சள் காமாலையை முறியடிக்கலாம்.

மெனோபாஸ்
- Posted: 4:11 AM
- |
- Author: சிவகுமார் சுப்புராமன்
- |
- Filed under: மெனோபாஸ்
நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது வரை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுபோவதைத்தான் மெனோபாஸ் என்கிறோம். பூப்பெய்தல், பிரசவம் போல ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. ஹார்மோன் மாற்றங்களால் அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். நாற்பத்தைந்து வயதில் மெனோபாஸிற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மனவலிமை மட்டுமே.
மெனோபாஸின் அறிகுறிகள்:
ஒவ்வொரு மாதமும் சரியாகத் தொடர்ந்து கொண்டிருந்த மாதவிடாய் சுழற்சியில் ஏற்படக்கூடிய மாறுதல்கள்தான் மெனோபாஸ் ஆரம்பமாகியிருக்கிறது என்பதன் முதல் அறிகுறி. மாதவிடாயின்போது அதீத உதிரப்போக்கு, மாதவிடாய் திடீரென்று நின்று போதல், அப்நார்மல் பிளீடிங், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பிளீடிங், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மேல் பிளீடிங் இவை மாதவிடாயில் ஏற்படும் மாற்றங்கள்.
உடல் முழுவதும் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒருவித சூடு ஒரு நிமிடம் ஃபிளாஷ் மாதிரி பரவிவிட்டுப் போகும். இதற்கு hot flushes என்று பெயர். பெரும்பாலான பெண்களுக்குத் திடீரென ஏற்படும் hot flushes பப்ளிக்கில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
பிறப்பு உறுப்பும் அதைச் சுற்றியுள்ள இழைகள் மெலிதாகவும், உலரவும் தொடங்கிவிடும்.
ஹார்மோன் மாற்றங்களால் மெனோபாஸில் இருக்கும் பெண்கள், ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மூட் ஒரு நாளிலேயே பலமுறை மாறிக்கொண்டே இருக்கும். அடிக்கடி கோபப்படுவது, எரிச்சல்படுவது, சோர்வு, மன உளைச்சல், டிப்ரஷன் போன்றவை மெனோபாஸ் பெண்களுக்கு ஏற்படக்கூடியவை. உடல் அளவில் ஏற்படக்கூடிய சில மாற்றங்களும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
செக்ஸில் ஆர்வம் குறையும். உடலில் எனர்ஜி குறைவதால் பொதுவாக எதிலேயும் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு வலிமிக்க உடலுறவாக அமையும்.
எலும்புகள் மெலியத் தொடங்கிவிடும், இதனால் நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள் எளிதில் ஆன்டியோ பொரோஸிஸ் நோயினால் தாக்கப்படுவார்கள். எலும்புகள் வீக்காகத் தொடங்கும். இந்த அறிகுறிகள் குண்டாக இருக்கும் பெண்களுக்கு இன்னும் அதிகமாகத் தெரியும்.
இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறிகள் இருதய நோய் பரம்பரை உள்ளவர்களுக்குத் தெரியத் தொடங்கும். சரி. இந்த மாற்றங்களுக்குக் காரணம்?
ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் செய்யும் முக்கிய வேலைகளைப் பார்க்கலாம். பெண்களின் உடலில் அவர்களுடைய மார்பகங்கள், பெல்விக் எலும்பு வளர்ச்சி, பிறப்பு உறுப்பு, கர்ப்பப்பை செயல்பாடுகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். கால்ஷியத்தை உறியச் செய்து எலும்புகளை பலப்படுத்துவதும் இந்த ஹார்மோன்தான். மேலும் நல்ல கொலஸ்ட்ராலான HDL_ஐ. அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலான LDL_ஐ.. குறைத்து பெண்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கவும் செய்கிறது. அதனால் மெனோபாஸ் வரை பெண்களுக்கு இருதய நோய் தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
மெனோபாஸின்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும். இதன் விளைவாக டிப்ரஷன், எலும்பு மெலிதல், இருதயநோய் ஆகியவை பெண்களை எளிதில் தாக்கக் கூடிய நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.
மெனோபாஸ் அறிகுறிகள் அனைத்தும் ஈஸ்ட்ரோஜன் குறையும்போது அறியப்படுகிறது. ஹார்மோன் ரீப்பிளேஸ்மெண்ட் தெரபி (HRT) என்ற சிகிச்சையின் மூலமே ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை ஈடுகட்ட முடியும். ஆனால், இந்த சிகிச்சைக்கு பக்கவிளைவுகள் உண்டு. இதைப்பற்றி சிகிச்சைக்கு முன்பு மகப்பேறு மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.
மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கும் லேடீஸ் கவனித்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்…
* ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லவேண்டிய ஸ்டேஜ் என்பதால், இதன் அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும்.
* 45 வயதைக் கடந்த பெண்கள் டி.என்.சி செய்து கொள்வது நல்லது. அந்த உதிரப் போக்கின் மற்றும் பல காரணங்களைத் தெரிந்து கொள்ள இது உதவும். இதன் மூலம் பிளீடிங்கும் ஓரளவுக்குக் குறையலாம்.
* மருத்துவரை அணுகி வைட்டமின் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். Omega 3 fathyalids உள்ள மீன் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* ஸ்ட்ரெஸ்ஸை முற்றிலுமாகத் தவிருங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல் நலன் கருதி எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது! குறிப்பாக குடும்பப் பிரச்னைகள்.
* குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையாக நடந்து கொண்டு உதவி பண்ணணும். வீட்டு வேலைகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கலாம். உடலை அதிகம் வருத்திக் கொள்ளக் கூடாது.
* உணவினை எரிக்கும் சக்தியான Basal Metabolic Rate சற்றே குறைந்து விடுவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். காலை வேளையில் சின்ன மீல்ஸாகவும் இரவு நேரங்களில் டிஃபன் ஐயிட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.
* ஞாபகத் தன்மை குறையத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஐந்துமுறை பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறப்பு உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் உலர்ந்த தன்மையைச் சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம்களை மட்டும் பயன்படுத்தலாம்.
* உடல் மற்றும் முகச் சருமம் உலர்ந்துவிடுவதால் மாய்சுரைஸர், கிளென்ஸர், டோனர் அப்பை செய்து கொள்ளலாம்.
* எலும்புகளுக்கு வலுவூட்ட ஏரோபிக் உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
* மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு வருடம் மாதவிடாய் சுழற்சி நின்றால் மட்டுமே மெனோபாஸ், மூன்று அல்லது ஆறு மாதங்கள் பீரியட்ஸ் நின்றால், மெனோபாஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் முடிந்த வரை முழுமையான மெடிக்கல் செக் _ அப் எடுத்துக் கொள்வது நல்லது!

பற்கள்
- Posted: 4:08 AM
- |
- Author: சிவகுமார் சுப்புராமன்
- |
- Filed under: பற்கள்
ஒருவரது பற்களின் தன்மையை வைத்து அவரது ஆரோக்கியத்தைச் சொல்லிவிட முடியும்.
பற்கள் உடலின் உள்பகுதியை படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி. உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதை, வெளியில் தெரியும் பற்களை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.
உதாரணமாக, ஒருவருக்கு ஈறுகளில் பாதிப்பு இருந்தால், அவருக்கு இதய நோய் வரும் ஆபத்து அதிகம். பற்களில் பாக்டீரியா நோய்த் தொற்று இருந்தால், இதயத்தின் உட் சுவர்களில் அழற்சி ஏற்படலாம்.
பற்களிலும், ஈறுகளிலும் தேங்கியுள்ள பாக்டீரியாக்கள் ஒரு கட்டத்தில் இரத்தத்தில் கலந்துவிடும். இதன் காரணமாக தமணிகளில் கொலஸ்ட்ரால் அதிக அளவில் சேரும். அதனால் ஆந்ரோ ஸ்க்ளீரோஸிஸ்’ என்ற அசாதாரண நிலை ஏற்படும். இதன் காரணமாக மாரடைப்பு உண்டாகும்.
பற்சிதைவு நோய் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் புரோட்டீனின் (சிபிஆர்) அளவு கூடுதலாக இருக்கும். இதனால் இதயத்தில் அழற்சி ஏற்படும்.
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பற்களிலும் பாதிப்பு உண்டாகும். இவர்களுக்கு அடிக்கடி இன்ஃபெக்ஷன் ஏற்படும். ஈறுகளில் உண்டாகும் பாதிப்புக்கு உடனடியாக சிகிச்சை எடுப்பது அவசியம். இல்லையேல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.
சிலருக்கு வாய் நாற்றமெடுக்கும். என்னதான் ‘மவுத் ப்ரெஷ்னர்கள்’ பயன்படுத்தினாலும் நாற்றம் நிற்காது. இதற்கு வாய்ப்பகுதியில் பாக்டீரியாக்கள் முகாமிட்டிருப்பது தான் காரணம். இதனைக் கட்டுப்படுத்த உடனே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால், நுரையீரல் பாதிப்படையும் ஆபத்து உண்டு.
புகைப்பது அதிக ஆபத்து!
பற்களில் வரும் நோய்களுக்கு புகைபிடிப்பது முக்கியக் காரணம். ரத்தப் புற்று நோய் அல்லது எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் ஈறுகளில் அதிக பாதிப்பு உண்டாகும். இதற்கு அவர்களிடம் ஏற்படும் மன அழுத்தமும் முக்கியக் காரணம்.
பல்வேறு நோய்களுக்கு சிபாரிசு செய்யப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போதும், ஈறுகளில் நோய் வரும் ஆபத்து உண்டு. குறிப்பாக, உயர் ரத்த அழுத்தத்துக்கு சிபாரிசு செய்யப்படும் கால்சியம் கானல் பிளாங்கர்ஸ், அலர்ஜிக்குரிய ஆன்டிஹிஸ்டமின்கள், எத்மோஷரபி, ரேடியேஷன் தெரபி போன்ற சிகிச்சைகளின் போதும் பற்களில் நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். (போதுமான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் இந்த பாதிப்பைக் குறைக்கலாம்)
பரம்பரையாக வருமா?
பல் நோய்கள் பரம்பரையாக வரும் வாய்ப்பு குறைவுதான். பெரும்பாலும் சந்தோஷமின்றி இருந்தாலும், பற்களைப் பராமரிக்காமல் வருவதும்தான் நோய் ஏற்பட அடிப்படைக் காரணங்கள். இவற்றைத் தவிர்ப்பதன் மூலம், இதய பாதிப்பையும் தடுக்க முடியும்.
புகை பிடிப்பவராக இருந்தால், அந்தப் பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும், ஃபுளோரைடு நிறைந்த பற்பசை கொண்டு, ஒரு நாளில் இரண்டு முறை பல்துலக்க வேண்டும்.
* தினமும் நாக்கை சுத்தம் செய்யவேண்டும்.
* பற்கள், நாக்கில் ஒட்டிக்கொள்ளும் உணவுப் பொருட்களை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். (குறிப்பாக சர்க்கரை நிறைந்த பொருட்கள்)
* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பற்களை செக் செய்வது அவசியம்.
* பற்கள் அல்லது ஈறுகளைச் சுற்றியிருக்கும் திசுக்கள் வலுவிழந்து இருப்பது சோதனையில் தெரியவந்தால், தயங்காமல் டாக்டரிடம் காட்டி, தேவையேற்பட்டால் மினி ஆபரேஷன் செய்து ஈறுகளைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியம்.

இரத்த அழுத்தம்
- Posted: 4:04 AM
- |
- Author: சிவகுமார் சுப்புராமன்
- |
- Filed under: இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் என்றால் என்ன…?
உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது…?
பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன.
இதில் இரண்டு வகை சொல்கிறார்களே (அதாவது ரீடிங்) அதுபற்றி விளக்கம்?
அதாவது சிஸ்டாலிக் பிரசர் இதயம் அழுத்திச் சுருங்கும் போது ஏற்படுவது டய்ஸ்டாலிக் பிரசர் என்பது இதயம் தளர்ந்து விரியும் போது ஏற்படுவது இதன் சராசரியான அளவுகள் 120/80 என்பதாகும்.
உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் யாவை?
இதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் வருவது. அதனால் தான் இதற்கு அமைதியான ஆட்கொல்லி என்று பெயர். இதன் தாக்கம் என்பது தலைசுற்றல், தலை வலி, நடக்கும்போது மூச்சு வாங்குதல் போல் தெரிதல், மயக்கம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம்.
இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் யாவை…?
உயர் இரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் மூளை, இருதயம், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு, மாரடைப்பு, பாரிச வாயு, நினைவிழத்தல், சிறுநீரகம் செயலிழப்பு, கண்பார்வை பாதிப்பு, கைகால் வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல் போன்றவை ஏற்படும்
இதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் யாவை…?
நல்ல உணவுப் பழக்கம் முக்கியம். உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடம் கை வீசி நடக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இடந்தருதல் ஆகாது. உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும் கலங்காமல் எதையும் எளிதாகக் கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்தால் என்ன செய்யப் போகிறது உயர் ரத்த அழுத்தம்?
இதற்கான முதல் உதவிகள் யாவை…?
முறையான உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி கேட்டல், மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளல், பால், பலசரக்கு, பண்டிகைக்குப் பணம் ஒதுக்கல் போல் மருந்துக்கும் மாதம் 300 ரூபாய் ஒதுக்கி வைத்தல், புகை பிடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்தல், எப்போதும் முக மலர்ச்சியுடன் இருத்தல் போன்றவை.
பி.பி யே வராதவர்கள் அதனை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் உபாயங்கள் யாவை…?
பி.பி. வராதவர்கள் என்று யாருமே இருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கும் வரலாம். காரணம் வயது ஏற…ஏற உடல் உறுப்புக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் நோய்கள் வருகிறது. எப்படி வயது காரணமாக கண்புரை நோய் சதைச் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறதோ அது போல் தான் இதுவும். ஆனால் சில பேருக்கு குறிப்பாக காட்டுவாசிகள் சிலரை பி.பி. அண்டுவதில்லை என்கிறார்கள். அப்படி ஒரு 10 சதவிகிதம் இருக்கலாம். ஆனாலும் சாத்தியம் இல்லை. காரணம் இது வயது சம்பந்தப்பட்டது. அப்படி உங்களில் யாருகேனும் வரவில்லை என்றால் நீங்கள் யோகக்காரர்கள். எல்லோருக்கும் அப்படி ஒரு யோகம் அடித்தால் நல்லதுதானே. சோம்பலை துரத்தி, முகமலர்ச்சி கூட்டி, மன உளைச்சல் நீக்கி வாழ்ந்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
இதுவரை உயர் ரத்த அழுத்தம் பற்றியே கூறினீர்கள். அழுத்தக் குறைவு (லோ பிரசர்) பற்றிக் கூறுங்களேன்…?
அழுத்தம் குறைந்த (அ) குறைந்த இரத்த அழுத்தம் பற்றிக் கவலையே வேண்டாம். அதனால் தொல்லைகள் இல்லை. அவர்கள் அளவாக உப்புச் சேர்க்கலாம். உணவு விஷயங்களில் கூட உயர் ரத்த அழுத்தக் காரர்களுக்குத்தான் கெடுபிடிகள். இவர்களுக்கில்லை. அதற்காக எப்படியும் சாப்பிடலாம் என்று இல்லை. அளவான நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவை எல்லோருக்கும் அவசியம் தானே?

Lemon Twist Blogger Template is an extremely beautiful blogger template created by JackBook.Com based on Lemon Twist Wordpress themes by farfromfearless.com. You can edit this words into your own.